பொன்மலை ஜி கார்னரில் சுரங்கப்பாதை : நிலம் அளவீடு செய்யும் பணி தொடக்கம்

பொன்மலை ஜி கார்னரில் சுரங்கப்பாதை : நிலம் அளவீடு செய்யும் பணி தொடக்கம்
X
திருச்சி மாநகர சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் சுமார் 15 ஆண்டு கால கோரிக்கை
திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்ன ரில் இருந்து டி.வி.எஸ். டோல்கேட் வரை உள்ள அணுகுசாலை இருவ ழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வருவதால் அடிக்கடி உயிர்ப்பலி வாங்கும் விபத்துக்கள் நடக்கின்றன. மேலும் பொன்மலை ரெயில்வே பணிமனை மற்றும் ரெயில்வே ஊழியர் குடியிருப்புகளுக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நேரடியாக இறங்கி கனரக வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இந்த பிரச்சினையை தீர்க்க ஜி கார்னரில் சுரங் கப்பாதை அமைக்கவேண்டும் என்பது திருச்சி மாநகர சமூக ஆர்வலர் கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் சுமார் 15 ஆண்டு கால கோரிக்கை ஆகும்.இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட திருச்சி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான துரை வைகோ பொன்மலை ஜி கார்னரில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். ரெயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது ரெயில்வே துறை அதிகாரிகள் சுரங்கப்பாதை அமைப்பதற்கு தேவையான இடத்தை பணம் ஏதும் இன்றி தானமாக வழங்குவதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து டெல்லியில் மத் திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரியை, துரை வைகோ எம்.பி. சந்தித்து பேசி இந்த திட்டத்தை நிறைவேற்றித்தர உத் தரவிடும்படி கேட்டுக்கொண்டார். அப்போது மத்திய மந்திரி அளித்த உறுதியை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் அதிகாரிகள் கோவிந்தராஜ், பிர வீன்குமார் ஆகியோருடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுரங்கப் பாதை எத்தனை மீட்டர் உயரம் மற்றும் அகலத்தில் அமைய இருக் கிறது என்பதை அப்போது அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.அதற் கான வரைபடத்தையும் காட்டினார்கள். இந்நிலையில் தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நில அளவை பிரிவு அதிகாரிகள் ஜி கார்னருக்கு வந்து வாகன சுரங்கப் பாதை அமைய உள்ள பகுதியில் நிலத்தை அளவீடு செய்து உள்ள னர். நிலம் அளவீடு செய்யும் பணி முடிந்து விட்டதால், இது குறித்த கோப்பு டெல்லிக்கு அனுப்பப்பட்டு நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, நிதி ஒதுக்கீடும் அறி விக்கப்பட்டால் சுரங்கப்பாதை கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story