திருச்சி: மொபட் மீது லாரி மோதியதில் பெண் பலியானார்

X
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் மரியஜோஸ்பின் (வயது 45). இவர் நேற்று தனது மொபட்டில் சமயபுரம் நோக்கி சென்றுக்கொண்டி ருந்தார். திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பனமங்கலம் என்ற இடத்தில் வந்தபோது அதே திசையில் பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மரியஜோஸ்பின் தலையில் லாரி ஏறி இறங்கி யது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

