வேலாயுதம்பாளையம் அருகே சைக்கிளில் சென்ற வர் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.

வேலாயுதம்பாளையம் அருகே சைக்கிளில் சென்ற வர் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
வேலாயுதம்பாளையம் அருகே சைக்கிளில் சென்ற வர் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம் புஞ்சை புகலூர் பழனிமுத்து நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 75. இவர் இரு தினங்களுக்கு முன்பு காலை 10 மணியளவில் வேலாயுதம்பாளையத்தில் இருந்து தலவாயபாளையம் செல்லும் சாலையில் அவர்கள் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத டூவீலர் ஒன்று ஆறுமுகம் ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் சைக்கிள் உடன் கீழே விழுந்த ஆறுமுகத்திற்கு தலை,வலது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, உடனடியாக அவரை மீட்டு திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆறுமுகத்தின் உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னையன் என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார் காவல்துறையினர், இது தொடர்பாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த டூவீலர் எது? அதனை ஓட்டிய நபர் யார்? என்று கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story