ராமநாதபுரம் பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது
ராமநாதபுரம் புதிய மாணவர் சேர்க்கை விழா: ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் திருப்பாலைக்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 01.03.2025 அன்று புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது. முதல் வகுப்பு மாணவர்கள் 12 மாணவர்கள் 14 மாணவிகள் மொத்தம் 26 மாணவர்கள் புதியதாக சேர்ந்தனர். ஆட்டோவில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பாடல் பிரச்சாரம் செய்யப்பட்டன. இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜு ஆசிரியர் பயிற்றுநர் உலகநாதன் கிராம தலைவர் தியாகராஜன், இருபால் ஆசிரியர்கள் இராம தாஸ்,மரிய அருள் லதா பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராணி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாத்திமா கனி மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்கள் பிஸ்கட்,பூ ,பழம், தேங்காய்,சாக்லேட், வெற்றிலை,பாக்கு பொருட்களுடன் சாமி தரிசனம் செய்து ஊர்வலமாக வந்து பள்ளியில் சேர்ந்துள்ளனர். புதிய மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. திருப்பாலைக்குடி காந்திநகர் பகுதியில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இந்த பிரச்சாரத்தில் புதிய மாணவர்கள் மாலை அணிவித்து பெற்றோர்கள் கல்வி சீர் வரிசையுடன் பள்ளிக்கு வந்து மாணவர்களை சேர்த்தனர் ஆசிரியர்கள் இன்முகத்தோடு மாணவர்களை வரவேற்று அறுசுவை பிரியாணி விருந்து வழங்கப்பட்டது இதில் ஆசிரியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story



