ராமநாதபுரம் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் தமிழக முதல்வர் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாட பட்டது. கமுதியில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் தனிக்கோடி சார்பில் உள்ள 70 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னி அரிசி வழங்க பட்டது. முதுகுளத்தூரில் திமுக IT WING சார்பில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்மணிகண்டன் ஏற்பாட்டில் பசும்குடில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு கேசரி, வடை, வெண்பொங்கல், இட்லி காலை உணவாக வழங்க பட்டது. முன்னதாக முதல்வரின் தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தரமாட்டோம், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்!, இதுதான் ஒரே இலக்கு! உறுதிமொழி எடுக்க பட்டது.
Next Story

