கிறிஸ்டோபர் பள்ளிகள் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

X
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி கிறிஸ்டோபர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாதகாப்பட்டி கிறிஸ்டோபர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் இணைந்து தண்ணீரின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, செல்போன் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் டேவிட் ஜார்ஜ் கிருபாகரன், நிர்வாக இயக்குனர் சாலமோன் கிருபாகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அன்னதானப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் முடிவடைந்தது. பின்னர் அங்கு விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆக்னஸ் மோனிகா, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சத்தீஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

