முத்துகாளியம்மன் தர்ம முனீஸ்வரர் ஆலய மகா சிவராத்திரி மாசி களரி நடைபெற்றது

கமுதி அருகே கொட்டும் மழையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்வெற்றி இலக்கை நோக்கி சென்ற காளைகள்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே திருவரை கிராமத்தில் முத்து காளியம்மன் தர்ம முனீஸ்வரர் ஆலய மகா சிவராத்திரி மாசிக் களரி திருவிழாவை முன்னிட்டு கொட்டும் மழையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது இதில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20க்கு மேற்பட்ட மாட்டு வண்டி பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர் பந்தயத்தில் பங்கேற்ற காலையில் வெற்றி இலக்கை நோக்கி சிட்டாய் பறந்து சென்றன கமுதி சாயல்குடி சாலையில் எல்கை தூரம் நிர்ணயிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்டு நடைபெற்ற பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பணம் குத்து விளக்கு பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சாலை இருபுறமும் ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்துச் சென்றனர்
Next Story