ராமநாதபுரம் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

X
ராமநாதபுரம்தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இளைஞரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவிட்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலக்கன்னிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வலம்புரி மகன் அருண்குமார்(28). இவர் தற்போது மதுரை மேலஅனுப்பானடியில் குடியிருந்து வருகிறார். இவர் கடந்த மாதம் முதுகுளத்தூர் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி தங்க நகையை பறித்துள்ளார். இதுதொடர்பாக முதுகுளத்தூர் போலீஸார் பிப்ரவரி 10-ம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் இவர் கடந்த 2021 முதல் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். அதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அருண்குமாரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து ராமநாதபுரம் சிறையில் இருந்த அருண்குமாரை முதுகுளத்தூர் போலீஸார் நேற்று கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

