டிராபிக் ஜாம்

டிராபிக் ஜாம்
X
திம்பம் மலைப்பாதையில் இன்று காலை லாரி பழுதால் தமிழகம் -கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தும்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். தமிழகம் -கர்நாடகவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பாதையாக திம்பம் மலைப்பகுதி இருந்து வருகிறது. இந்த 27 கொண்டை ஊசி வளைவுகளை கடப்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக அளவுக்கு அதிகமாக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனங்களாலும், திடீரென வாகனங்கள் பழுதாகி நிற்பதாலும் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு பாரம் ஏற்றி சென்ற மினி லாரி திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது திம்பம் மலைப்பாதை 22- வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பிய போது திடீரென பழுதாகி நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் சாலையில் இருபுறம் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் தமிழகம் -கர்நாடக இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் இருக்க வேண்டிய சூழலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது வரை கிட்டத்தட்ட 3 மணி நேரமாக போக்குவரத்து சீர் செய்யப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
Next Story