அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டாரத்தில் எம் பி  நன்றி அறிவிப்பு 

அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டாரத்தில் எம் பி  நன்றி அறிவிப்பு 
X
கன்னியாகுமரி
மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய்வசந்த் எம்.பி அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டாரத்தில் மருங்கூர், மயிலாடி, தேரூர், அழகப்பபுரம்   கொட்டாரம், நல்லூர், பகுதிகளில் வாகனத்தில் நின்று நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.        இந்நிலையில்  நல்லூர் கிராம ஊராட்சிக்கு வருகை தந்து மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கே டி உதயம்   தலைமை தாங்கினார், மாவட்ட துணை தலைவர் சாம் சுரேஷ்குமார், அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்  தங்கம் நடேசன் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், எஸ்.டி. பிரிவு மண்டல தலைவர் ஜோயல், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன், நல்லூர்பஞ்சாயத்து கமிட்டி மோசஸ் உட்பட  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story