அரசு பள்ளியில் கலையரங்கம் திறந்த எம் பி

X
கன்னியாகுமரி மாவட்டம் தோவளை ஊராட்சி ஒன்றியம் ஈசாந்திமங்கலம் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளி பள்ளியில் கலையரங்கம் அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். இதன் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ6.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பணி நிறைவடைந்தது. இதையடுத்து நேற்று ரிப்பன் வெட்டி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், வட்டார தலைவர் செல்வராஜ், சீலன் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

