தனியார் தொண்டு நிறுவன இலவச கல்வி சேவை மையம் ஆண்டுவிழா

X
Komarapalayam King 24x7 |2 March 2025 6:49 PM ISTதனியார் தொண்டு நிறுவன இலவச கல்வி சேவை மையம் ஆண்டுவிழா குமாரபாளையத்தில் நடந்தது.
சென்னையை சேர்ந்த காமதேனு சேவா மையம் சார்பில் தமிழகம் முழுவதும் இலவச கல்வி சேவை செய்து வருகிறார்கள். அரசு பள்ளியில் படித்து, தனியார் நடத்தும் டியூசன் வகுப்புக்கு போக முடியாத மாணவ, மாணவர்களுக்கு இந்த சேவை அமைப்பின் மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமித்து கல்வி கற்பித்து வருகிறார்கள். இந்த கல்வி சேவை மையத்தின் ஆண்டுவிழா மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி தலைமை வகித்தார். ஆசிரியைகள் சித்ரா, ராணி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களான இவர்கள், ஆங்கில நாடகம், மவுன மொழி நாடகம், வினாடி வினா, கண்கவர் ஆடைகளுடன் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு, சிறந்த கலை நிகழ்ச்சிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக விடியல் பிரகாஷ், தீனா, உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.
Next Story
