பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவர் கைது

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவர் கைது
X
கைது
தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் நேற்று (மார்ச்.1) குற்றத் தடுப்பு சம்பந்தமாக கம்பம் கள்ளர் பள்ளி அருகே சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அப்பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (41) என்பவர் பள்ளி மாணவர்களுக்கும், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும் விற்பனை செய்வதற்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் சத்யராஜை கைது செய்தனர்.
Next Story