மேல்மலையனூர் சாப்ட்வேர் இன்ஜினியரிடம் பணம் மோசடி

X
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுாரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன், 36; சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மொபைல் போனுக்கு கடந்த பிப்ரவரி 20ம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதிநேர பணி எனக்கூறி ஒரு லிங்க்கை அனுப்பியுள்ளார்.அந்த லிங்க்கில் சென்ற நவநீதகிருஷ்ணன், யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வோர்டு உருவாக்கினார். அதற்குள் இருந்த வாடகை வீட்டின் முகவரிக்கு பிரமோட் செய்ய கூறி டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதை செய்து முடித்த நவநீதகிருஷ்ணன் தனது வங்கி கணக்கில் 4000 ரூபாய் பெற்றுள்ளார்மற்றொரு மொபைல் எண் மூலம் நவநீதகிருஷ்ணனை தொடர்பு கொண்ட மர்ம நபர், சிறிய தொகையை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறினார்.இதை நம்பிய நவநீத கிருஷ்ணன், 10 தவணை களில் 8 லட்சத்து 6 ஆயிரத்து 972 ரூபாயை அனுப்பினார்.இதை தொடர்ந்து, நவநீதகிருஷ்ணன் டாஸ்கை முடித்த பின், அவருக்கு வர வேண்டிய தொகை வரவில்லை.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நவநீதகிருஷ்ணன் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்..
Next Story

