கோழிக்கழிவுகளால் வீடுகளுக்கு படையெடுக்கு ஈக்கள்.

கோழிக்கழிவுகளால் வீடுகளுக்கு படையெடுக்கு ஈக்கள்.
X
கபிலர்மை பகுதிகளில் கோழிக்கழிவுகளால் வீடுகளுக்கு படையெடுக்கு ஈக்கள் நோய் பரவும் அபாயம்.
பரமத்தி வேலூர்,மார்.2: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளியில் கோழிக்கழிவுகளை அதே இடங்களில் குவித்து வைப்பதாலும் ஒரு சில விவசாயிகள் தாங்கள் விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்படுத்த விளைநிலங்களில் கோழிக்கழிவுகளை பரப்பி விடுவதால் அந்த கழிவுகளுக்கு அதிக அளவில் ஈக்கள் வருகிறது. இதனால் கபிலர்மலை சுற்றுவட்டாரதில் உள்ள கபிலக்குறிச்சி, சோளிப்பாளையம், தண்ணீர்பந்தல்,இருக்கூர், சிறுக்கிணத்துப்பாளையம், தொட்டிபாளையம் உள்ளிட்ட பல்லவேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு ஈக்கள் அதிக அளவில் வருகிறது. இந்த ஈக்கள் வீடுகளில் உள்ள உணவு பொருட்கள் உள்ளிட்ட வைகளில் அமர்வதால் அதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதி பொதுமக்கள் அச்சம் கொடுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story