வரி வசூல்

வரி வசூல்
X
மாநகராட்சி வரி வசூல் பணி தீவிரம் வரி வசூல் மையங்கள் சனி, ஞாயிறு செயல்படும் என அறிவிப்பு
ஈரோடு மாநகராட்சியில் வரி வசூல் மையங்கள் விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையிலும் செயல்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈரோடு மாநகராட்சியில் 2024=2025 நிதியாண்டிற்கான, சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரியினங்களை வசூலிப்பதில்,  மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக, வரும் 31க்குள் 100 சதவீதம் வரியினங்களை வசூலிக்க முடிவு செய்துள்ள மாநகராட்சி நிர்வாகம், 4 மண்டலங்களிலும் தலா 100 பணியாளர்கள் என்ற அடிப்படையில், 400 பணியாளர்களை வசூலிக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்நிலையில், மாநகராட்சியில் உள்ள வரி வசூல் மையங்கள், நடமாடும் வரி வசூல் மையம் என அனைத்தும், விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையிலும் செயல்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :2024=2025 நிதியாண்டில் மாநகராட்சியில் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகையினங்கள், பாதாள சாக்க்டை இணைப்புக் கட்டணம் மற்றும் இதர வரியினங்களை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கையினை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.வரி வசூல் மையங்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். வரியினங்களை வசூல் மையங்களிலோ அல்லது இணையதள வாயிலாகவோ செலுத்த வேண்டும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story