சிறுத்தை நடமாட்டம்

சிறுத்தை நடமாட்டம்
X
சென்னிமலை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் டிரோன் மூலம் வனத்துறை தீவிர கண்காணிப்பு
சென்னிமலை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அதனை பிடிக்க கூண்டு வைத்துள்ளதோடு, டிரோன் மூலம் தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். - ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள சில்லாங்காட்டுவலசை சேர்ந்த விவசாயி குமாரசாமி. சமீபத்தில் இவரது தோட்டத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் புகுந்த மர்ம விலங்கு, ஆடுகளை கடித்து கொன்றது. இதேபோன்று, அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது தோட்டத்தில், கன்றுக்குட்டி மற்றும் நாய்க்குட்டியை, கடந்த இரு நாட்களுக்கு முன்பு கடித்து குதறியது. இறந்த ஆடுகள், கன்றுக்குட்டி பிரேத பரிசோதனை மற்றும் வனவிலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்த வனத்துறையினர், அந்த மர்ம விலங்கு சிறுத்தைப்புலி என்பதை உறுதி செய்தனர்.அதனைத்தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க நேற்று வனத்துறை சார்பில் 2 கூண்டுகள் கொண்டு வரப்பட்டது. இந்த கூண்டுகள் அடிக்கடி வன விலங்கின் நடமாட்டம் இருந்த பகுதியில் வனத்துறையினர் வைத்தனர். மேலும், சென்னிமலை வனப்பகுதியில் பல இடங்களில் வனத்துறையினர் டிரோன் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட போவதாகவும் விவசாயிகளிடம், வனத்துறையினர் தெரிவித்தனர்.
Next Story