பிரிவு உபச்சார விழா

பிரிவு உபச்சார விழா
X
மாநகராட்சி ஆணையருக்கு பிரிவு உபச்சார விழா
ஈரோடு மாநகராட்சி ஆணையர், மயிலாடுதுறை கலெக்டராக பதவி உயர்வு பெற்றதை தொடர்ந்து, அவருக்கு பிரிவு உபச்சார விழா நேற்று நடைபெற்றது.ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீகாந்த் பதவி உயர்வு பெற்று மயிலாடுதுறை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு மாநகராட்சியில் அவருக்கு வாழ்த்து கூறும் நிகழ்ச்சி மற்றும் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதுபோல் மாநகராட்சி துணை ஆணையாளர் தனலட்சுமி, தலைமை பொறியாளர் விஜயகுமார் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
Next Story