குடிநீர் சிக்கனம்

X
ஊராட்சிக்கோட்டை தலைமை நிரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ஈரோடு மாநகராட்சியில் உள்ள பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துணை ஆணையர் தனலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :ஈரோடு மாநகராட்சிக்கு வரதநல்லூர் ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. தற்போது ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இதனால், ஈரோடு மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் நேற்று (1ம் தேதி) முதல் நாளை மறுநாள் (3ம் தேதி) வரை, மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் போதுமான அளவு வழங்க முடியாத நிலை உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவுற்ற பின்னர் குடிநீர் சீராக விநியோகிக்கப்படும். எனவே, இதனால் ஏற்படும் அசௌகரியத்தை பொறுத்துக்கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு துணை ஆணையர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.
Next Story

