விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு :

X
விருதுநகர் சந்தை : துவரை, உளுந்து, பாசிப் பருப்பு விலை குறைவு : பாமாயில், பட்டாணி விலை உயர்வு... விருதுநகர் சந்தையில் துவரை, உளுந்து, பாசிப் பருப்பு, மசூர் பருப்பு ஆகியவற்றின் விலை சற்று குறைந்து வருகிறது. பாமாயில், பட்டாணி பருப்பு விலை உயர்ந்து காணப்பட்டது. விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு : கடலை எண்ணெய் 15 கிலோ கடந்த வாரம் ரூ.2600க்கு விற்கப்ப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.50 வரை குறைந்துள்ளது. எனவே ரூ.2550க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாமாயில் கடந் வாரம் ரூ.2180க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் டின்னுக்கு ரூ 5 வரை உயர்ந்துள்ளது.எனவே, ரூ.2185க்கு விற்பனையாகிறது. துவரம் பருப்பு 100 கிலோ நயம் ரூ.10,900 முதல் 11,500 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.600 குறைந்துள்ளது. எனவே, ரூ.10,300 முதல் 10,900 வரை விற்பனை செய்யப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு வகை ரூ. 11500க்கு விறக்கப்பட்டது. இந்த வாரம் ரூ. 100 குறைந்து ரூ.11300க்கு விற்பனையாகிறது. தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு வகை ரூ.9400 க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.50 குறைந்து ரூ.9350க்கு விற்கப்படுகிறது. கடலை எண்ணாக்கு 100 கிலோ ரூ.4600க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.100 குறைந்துள்ளது. எனவே, ரூ.4500க்கு விற்பனை செய்யப்படுகிறது. பட்டாணி பருப்பு 100 கிலோ இந்தியா வகை ரூ.4800 க்கு விற்பனையானது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. எனவே ரூ.5ஆயிரம் என விபனையாகிறது. சிகப்பு மசூர் பருப்பு ( பருவட்டு ) 100 கிலோ கடந்த வாரம் ரூ.7250க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து அதிகரிப்பால் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, மூட்டைக்கு ரூ.4150 வரை குறைந்து, ரூ.3100க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மசூர் பருப்பு உடைத்தது 100 கிலோ கடந்த வாரம் ரூ. 10100க்கு விற்பகப்பட்டது. இந்த வாரம் மூட்டைக்கு ரூ.100 குறைந்துள்ளது. எனவே, ரூ.10ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. இதேபோல் கடந்த வாரம் ரூ.14,100க்கு விற்கப்பட்ட மஞ்சள் மசூர் பருப்பும் ரூ.100 குறைந்து தற்போது ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
Next Story

