கே.செவல்பட்டி ஸ்ரீலட்சம்மாள் கோவில் பல ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்*

X
காரியாபட்டி கே.செவல்பட்டி ஸ்ரீலட்சம்மாள் கோவில் பல ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கே.செவல்பட்டியில் சென்னப்ப ரெட்டியார் வகையறாவுகளுக்கு பாத்தியப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த லட்சம்மாள் கோவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கிராம மக்கள் கோவிலில் திருப்பணிகள் வேலை செய்து கோபுரம் கட்டி முடித்தனர். புரைமைப்புக்கு பிறகு கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மார்ச் -1ந் தேதி காலை 8 மணிக்கு மங்கள இசையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கப்படடது. பின்னர் விக்னேஸ்வரர் பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்து பூஜை முடிந்தவுடன் முதல் கால யாகசாலை பூஜை முடிக்கப்பட்டது. இன்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, திரவ்யாஹுதி, மகா பூர்ணா ஹுதி முடிந்தவுடன் கடம் புறப்பாடாகி புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு லட்சம்மாள் கோவில் ராஜ கோபுர லசங்களில் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கற்பக விநாயகருக்கும், லட்சம்மாள் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு விழா குழுவின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

