முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது

X
தேர்தல் சமயத்தில் மு க ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை - அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேச்சு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வருகை பாலவநத்தம் கிராமத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்டம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் போடம்பட்டி சங்கரலிங்கம் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தயவு செய்து இந்த பொதுக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர் கருணாநிதி, அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி கலந்து கொண்டு சிறப்பரையாற்றினர். மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் ஏழைப் பெண்களுக்கு வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் முனியசாமி, மு க ஸ்டாலின் தன்னை அப்பா என கூப்பிடுமாறு கூறுகிறார். தாத்தா வயதில் இருந்து விட்டு வேடம் போட்டு அப்பா என கூறுமாறு அழைக்கிறார். தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் என அதிமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் திமுக ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி படிப்படியாக உயர்ந்து உழைப்பால் அதிமுக பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு வந்துள்ளார். ஆனால் திமுகவில் குடும்ப ஆட்சி நடக்கிறது. மு க ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் அளித்த 525 வாக்குறுதிகளில் 20 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விலைவாசி விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது. போதைப்பொருள் புழக்கம் பாலியல் வன்கொடுமை என அனைத்தும் அதிகரித்துள்ளது. 2026 இல் அதிமுக ஆட்சி அமைவது நிச்சயம் என பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மணிமேகலை, ராஜவர்மன், எதிர் கோட்டை சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

