சவுடு மண் எடுக்கும் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர் கைது

அதானி துறைமுக ஆறு வழிச்சாலை பணிகளுக்காக எல்என்டி நிறுவனம் கிருஷ்ணா கால்வாய் மீது சவுடு மண் எடுக்கும் குவாரியை நடத்தி வருகிறது இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கரடிப்புத்தூர் கிராமத்தினர் கைது
திருவள்ளூர் : அதானி துறைமுக ஆறு வழிச்சாலை பணிகளுக்காக எல்என்டி நிறுவனம் கிருஷ்ணா கால்வாய் மீது சவுடு மண் எடுக்கும் குவாரியை நடத்தி வருகிறது இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கரடைப்புத்தூர் கிராமத்தினர் கைது. குழந்தைகளையும் கைது செய்து திருமணம் மண்டபத்தில் அடைத்த காவல்துறையினர். மனித உரிமை மீறல் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் கரடிப்புத்தூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை மக்கள் எதிர்ப்பை மீறி தனியாருக்கு மணல் குவாரி அமைத்துக் கொடுத்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பெண்கள் மீது தடியடி மற்றும் கைது நடவடிக்கை மேற்கொண்ட போது பெண் ஒருவர் கையில் பலத்த ரத்த காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு அல்லாமல் காவல்துறை வாகனத்தில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம் இதனை உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு இந்த கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஜனநாயகம் முறைப்படி குடும்ப அட்டை வாக்காளர் அட்டை ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை அரசு ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைத்து ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினரை கொண்டு தரதரவனை இழுத்துச் சென்று கைது செய்தனர் மேலும் அவர்களுடன் சிறு குழந்தைகளையும் சிறுவர் சிறுமிகளையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றதுடன் அவர்களை மண்டபத்தில் அடைத்தனர் இது ஒரு மனித உரிமை மீறும் செயல் என்பதால் தங்கள் கிராமத்திற்கு என்று இருந்த நிலத்தையும் எல் அண்ட் டி நிறுவனத்திற்கு மண் எடுக்க அனுமதித்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் தூர் வார வேண்டிய ஏரிகளை கண்டறிந்து மாற்று இடத்தை மண்ணெடுக்க வழங்க வேண்டும் அத்துமீறி பெண்களை குழந்தைகளுடன் கைது செய்து மண்டபத்தில் அடைத்த காவல்துறையினர் மீது மனித உரிமை ஆணையம் விசாரணை செய்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டள்ளது
Next Story