குடிநீர் குழாய் உடைந்து காவேரி குடிநீர் சாலையில் பெருக்கெடுத்திய ஓடி அவல நிலை
பெரம்பலூர் நகரப் பகுதிகளில் இன்று மாலை நகராட்சி முன்பு சாலையோரத்தில் காவேரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அரை மணி நேரமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது அருகில் உள்ள பொதுமக்களும் தள்ளுவண்டி கடை வியாபாரிகளும் அதிர்ச்சிக்கு உள்ளாகின சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அதிகாரிகள் உரிய நேரத்தில் வந்து தண்ணீரை கட்டுப்படுத்த தவறிவிட்டனர் அதனால் பெரம்பலூர் நகரப் பகுதியில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தன இதுபோன்ற தவறுகள் நடக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்
Next Story



