உதகையிலிருந்து கோவை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பற்றி எரிந்த ஓம்னி கார் முற்றிலும் தீயில் எரிந்தது.....

X
உதகையிலிருந்து கோவை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பற்றி எரிந்த ஓம்னி கார் முற்றிலும் தீயில் எரிந்தது..... சமவெளிப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமானோர் வருகை புரிகின்றனர் அதேபோல் நீலகிரியில் இருந்து சொந்த வாகனங்கள் மூலம் உள்ளூர் மக்கள் மலைப்பாதையில் பயணம் செய்கின்றனர் மலைப்பாதையில் கார்களில் பயணம் செய்யும் போது சில சமயம் வாகனங்கள் தீப்பற்றக்கூடிய சம்பவங்களும் நடந்து வருகிறது இந்த நிலையில் உதகையிலிருந்து கோவை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேல்வியூ பகுதியில் omni கார் ஒன்று எரிந்தது காரில் சென்றவர்கள் புகை வருவதை கண்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர் அப்போது திடீரென காரில் ஏற்பட்ட தீ மள மளவென எரிந்தது இதில் கார் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத்துறையினர் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர் இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது காரில் சென்றவர்கள் உதகையைச் சேர்ந்தவர்கள் என்றும் தீப்பிடித்த போது உடனடியாக காரில் இருந்து இறங்கி உயிர் தப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள காவல் துறையினர் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர் உதகையிலிருந்து கோவை செல்லக்கூடிய சாலையில் omni Car திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

