ஜெயங்கொண்டம் அருகே காணாமல் போன நிதி நிறுவன ஊழியர் எரித்து கொலை எரித்தது யார் போலீசார் விசாரணை

X
அரியலூர், மார்ச்.3- தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் மேல வீதியை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சிவா(30). இவர் தனியார் கம்பெனி ஒன்றில் பைனான்சியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் அணைக்கரை பகுதிக்கு வேலை நிமித்தமாக வந்த அவர் வீடு திரும்பவில்லை. இதில் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் அளித்தனர். இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆயுதக்களம் செங்கால் ஓடை அருகே ஆடு மாடு மேய்ப்பவர்கள் இன்று காலை சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் பாதி உடல் கருகிய நிலையில் மனித உடல் ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி சீராளன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கருகிய நிலையில் எறிந்த மனித உடல் கஞ்சனூரைச் சேர்ந்த பைனான்சியர் சிவாதான் என்பதை அவரது உறவினர்கள் மூலம் உறுதி செய்தனர். எரித்து கொலை செய்யப்பட்ட பைனான்சியர் சிவா, அணைக்கரை, கண்டியகொள்ளை, கோடாலி ஆகிய கிராமங்களில் பணம் வசூல் செய்வதற்காக வந்து போக இருந்துள்ளார். அதன்படிதான் பைனான்சியர் சிவா வந்திருக்கிறார். இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவரை செங்கால் ஓடைக்கு வரவழைத்து மர்ம நபர்களால் இன்றைய தினம் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனிடையே சந்தேகத்தின் பேரில் போலீசார் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

