பாம்புகள் நடமாட்டம்

பாம்புகள் நடமாட்டம்
X
2 கட்டுவிரியன் பாம்புகள் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்து நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல்
ஈரோடு சென்னிமலை சாலை முத்தம்பாளையம் பகுதி 3 வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன.மேலும் இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே அங்காங்கே சில இடங்களில் முட்புதர்களும் உள்ளன.இதனால் இங்கு அடிக்கடி பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றன.இந்த நிலையில் நேற்று இரவு 5 முதல் 6 அடி நீளம் உள்ள இரண்டு கட்டுவிரியன் பாம்புகள் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்து நடனமாடி கொண்டு இருந்தது. இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். தற்போது இந்்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அடிக்கடி இது போன்ற கொடிய விஷம் கொண்ட பாம்புகள் இப்பகுதியில் உலாவி வருவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story