மண்டைக்காடு:  இந்து சமய மாநாடு துவக்கம்

மண்டைக்காடு:  இந்து சமய மாநாடு துவக்கம்
X
மேற்கு வங்காள கவர்னர்
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்து சமய மாநாடு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாண்டிச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் குத்து விளக்கு ஏற்றி பேசினார். தொடர்ந்து மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.     அவர் பேசுகையில்:-  நான் தமிழ் மொழியை நேசிக்கிறேன். கலாச்சாரத்தின் பிறப்பிடம் தமிழ்நாடு. தமிழ் மொழி எனக்கு பிடிக்கும். நான் தமிழ் பேச மண்டைக்காடு அம்மன் அருள் புரிய வேண்டுகிறேன். என பேசினார்.       இந்த நிகழ்ச்சியில் வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம ஸ்வாமி சைதன்யானந்த்ஜி, திருநெல்வேலி தருமபுரம் ஆதினம் மௌன மீனாட்சி சுந்தர தம்புரான் சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர். எம் ஆர் காந்தி எம்எல்ஏ, கேரள முன்னால அமைச்சர் சிவகுமார், முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி உட்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.
Next Story