இளம்பெண் ஆபாச படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவர் கைது 

இளம்பெண் ஆபாச படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவர் கைது 
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தம் துறை பகுதி சேர்ந்த 30 வயது இளம் பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-         நான் திருமணம் முடித்து கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். அப்போது குளச்சல் பகுதியை சேர்ந்த ராபர்ட் டில்டன் (32) என்பருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னுடன் நெருங்கி பழகி வந்ததை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். பின்னர் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதை  அடுத்துப் பிரிந்து விட்டோம். இந்த நிலையில் ராபர்ட் டில்டன் என்னுடைய ஆபாச படங்களை சமூகத்தலங்களில் வெளியிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.       இது குறித்து விசாரிக்க சைபர் கிராம்பு போலீசுக்கு மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். விசாரணையில் ராபர்ட் டில்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
Next Story