கோவை: விலை குறைந்து மல்லிகைப்பூ அறநூறு ரூபாய்க்கு விற்பனை !

X
கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்து அதிகரித்ததால், அவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.600க்கு விற்பனையானது. கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பூக்கள் கோவை பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. திருவிழா, முகூர்த்தம் மற்றும் பண்டிகை காலங்களில் பூக்களின் விற்பனை அதிகமாக இருக்கும். பூக்களின் வரத்தை பொறுத்து காலை, மாலை என இரு வேளைகளில் பூக்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் சிவராத்திரி என்பதால் பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்திருந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,500 முதல் ரூ.1,600 வரை விற்பனையானது. தற்போது கோவை பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.600க்கு விற்பனையானது. அதே போல் செவ்வந்தி ரூ.120, ஜாதி மல்லி ரூ.800, முல்லை ரூ.800, செண்டு மல்லி ரூ.50, பட்டன் ரோஜா ரூ.120 முதல் ரூ.160, சிவப்பு அரளி ரூ.100, தாமரை ஒன்று ரூ.10, செண்பகப்பூ ஒன்று ரூ.10, 20 பூக்கள் கொண்ட ரோஜா கட்டு ரூ.120 என்று விலை குறைந்து விற்பனையானது. இந்த விலை குறைவு, பூக்கள் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதே நேரத்தில், பூக்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள், விலை குறைந்ததால் வருத்தம் அடைந்துள்ளனர்.
Next Story

