விஜயராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம் வெகுவிமரிசை

X
காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, மாசி மாத பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருகிறார். இதில், மூன்றாம் நாள் உற்சவமான கருடசேவை உற்சவம் மற்றும் நேற்று முன்தினம் யாளி வாகன உற்சவம் நடந்தன. பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் உற்சவமான நேற்று, தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில், காலை 7:00 மணிக்கு, விஜயராகவ பெருமாள் எழுந்தருளினார். தேரை, பக்தர்கள் வடம் பிடித்து, 'கோவிந்தா... கோவிந்தா' என, கோஷம் எழுப்பினர். பல்வேறு வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
Next Story

