விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து பரிசுகளை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி
விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து பரிசுகளை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டியை நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி துவங்கி வைத்தார். இதில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகள், 3 நகராட்சி வார்டுகள் 21, 8 பேரூராட்சிகள் என 250 இடங்களில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள்,இளைஞர்கள்,இளம் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு விவிஜி நகர் பகுதியில் சைக்கிள் மிதவேக போட்டி, கயிறு இழுத்தல்,பாட்டிலில் நீர் நிரப்புதல்,பானை உடைத்தல்,மியூசிக் சேர்,100 மீட்டர் ஓட்ட போட்டிகளில் முதல் 3-இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்த பரிசு தொகையாக 30 லட்சம் ரூபாய் முதல் 3- இடங்கள் பிடிக்கும் நபர்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளது.
Next Story






