நூலக அறிவியல் வளங்கள் மற்றும் புதுமை தலைப்பில் கருத்தரங்கு

நூலக அறிவியல் வளங்கள் மற்றும் புதுமை தலைப்பில் கருத்தரங்கு
X
நூலக அறிவியல் வளங்கள் மற்றும் புதுமை தலைப்பில் கருத்தரங்கு
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகத்துறை மற்றும் நிறுவன புதுமை மையத்தின் (IIC) சார்பில் தேசிய அறிவியல் தின விழாவில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் “நூலக அறிவியல் வளங்கள் மற்றும் புதுமை” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உதவி ஆனணயரும் இக்கல்லூரியின் செயலருமாகிய மு.இரமணிகாந்தன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கி. வெங்கடாசலம் தலைமை உரையாற்றினார்.. நூலகர் முனைவர் பா.ஜெகன் வரவேற்புரை வழங்கினார். மற்றும் சிறப்பு விருந்தினராக முனைவர் T. பிரகாஷ், நூலகர், நந்தா தொழில்நுட்பக் கல்லூரி, ஈரோடு, கலந்து கொண்டு நூலக வளங்களை புத்தாக்கம் செய்யும் வழிகள் பற்றிய முக்கிய உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் முனைவர் சு. பிரேமா (கணினி பயன்பாட்டு துறைத் தலைவர் & IIC தலைவர்), முனைவர் மா. வசந்தகுமாரி (தமிழ்த்துறைத் தலைவர்), முனைவர் மோ. மெய்ஞானம் (வணிக மேலாண்மைத் தலைவர்), முனைவர் எ.திருமலை ராஜா (ஆங்கிலத் துறைத் தலைவர்), முனைவர் சி. நளினி (கணிதத் துறைத் தலைவர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் விருந்தினரை மரியாதையுடன் பாராட்டி கௌரவித்தனர். மாணவர்கள் நூலக வளங்களை புதுமையாக பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்து விருந்தினர் தனது உரையில் எடுத்துக் கூறினார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த கருத்தரங்கில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் இவ்விழாவில் முடிவில் நன்றி உரையை முனனவர் வெ. சித்ரா, வணிகவியல் உதவிப் பேராசிரியர் வழங்கினார். நிகழ்ச்சியை (III-BCA) கணினி பயன்பாட்டு துறையைச் சேர்ந்த மாணவி M.பரமேஸ்வரி தொகுத்து வழங்கினார்
Next Story