சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு

சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு
திருச்செங்கோடு நகராட்சி 33வது வார்டு கரட்டுப்பாளையம் பகுதியில் இருந்த அங்கன்வாடி மையம் பழுதடைந்து இருந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப் பட்டது. இந்த அங்கன்வாடி மையத்தை நகர் மன்ற தலைவர் நளினிசுரேஷ் பாபு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வித்யலட்சுமி, பகுதி நகர் மன்ற உறுப்பினர் சுரேஷ் குமார், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் முருகேசன், திவ்யாவெங்கடேஸ்வரன், செல்லம்மாள்தேவராஜன்,ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story