மாநில பொதுக்குழு கூட்டம்

X
ஓய்வு பெற்ற மருந்து கிடங்கு அலுவலர்கள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாநில இணைச்செயலாளர் துரைசாமி வரவேற்புரையாற்றினார். இதில், ஓய்வு பெற்ற மருந்து கிடங்கு அலுவலர்கள் அனைவரையும், ஓய்வு பெற்ற மருந்து கிடங்கு அலுவலர்கள் நல சங்கத்தின் உறுப்பினராக இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளுதல். காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும், தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்து, அதில் மருந்தாளுநர் பணியை உறுதிப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், ஓய்வு பெற்ற மருந்து கிடங்கு அலுவலர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

