தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்பு கட்ட பூமி பூஜை

X
திருச்செங்கோடு நகராட்சி 14வது வார்டு சாலப்பாளையம் பகுதியில் தீயணைப்பு நிலையம் உள்ளது இங்கு பணியில் உள்ள நிலைய அலுவலர்கள் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர்களுக்கான குடியிருப்பு நிலைய வளாகத்திலேயே வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர் இந்த நிலையில் நிலையத்திற்குப் பின்புறம் இருந்த சுமார் 56 சென்ட் இடத்தை தேர்வு செய்து அதிலிருந்து பாறைகளை உடைத்து சமன் செய்து இரண்டு நிலை அலுவலர்களுக்கான குடியிருப்பு 12 தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்பு என 14 குடியிருப்புகள் கட்ட திட்டம் தீட்டப்பட்டு கடந்த 29.0.6.24சட்டப் பேரவை கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில் ரூ 4 கோடியே 33 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. இதில் 20% குறைக்கப்பட்டு இரண்டு நிலைய அலுவலர் குடியிருப்புகள் முதல் தளத்தில் 93.02 சதுர மீட்டர் இரண்டாம் தளம் 93.52 சதுர மீட்டர் என மொத்தம் 186.04 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு நிலையை அலுவலர்கள் குடியிருப்புகளும், தலா 303.72 சதுர மீட்டர் (750 ச.அடி) பரப்பளவு கொண்டமுதல் தளம் இரண்டாம் தளம் மூன்றாம் தளம் என மூன்று அடுக்குகளாக 12 வீடுகளும் கட்ட ரூம் 3 கோடியே 22 லட்சத்து 57 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவக்க விழா இன்று நடைபெற்றது. சாலப்பாளையம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினிசுரேஷ்பாபு ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் சேலம் கோட்ட தீயணைப்புத் துறை துணை இயக்குனர் எஸ். கல்யாணகுமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ஆனந்த், திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் கரிகாலன், உதவி செயற் பொறியாளர் அப்சர் அகமது, இளநிலை பொறியாளர் இன்பராசு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, திருச்செங்கோடு நகர்மன்ற துணைத்தலைவர் நகர திமுக செயலாளர் கார்த்திகேயன், நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர், மத்திய தொலைத் தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் ராயல்செந்தில், கொமதேக தெற்கு நகரச் செயலாளர் நகர்மன்ற உறுப்பினர் அசோக்குமார், வடக்கு நகர செயலாளர் சேன்யோகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் தாமரைச்செல்வி மணிகண்டன், செல்லம்மாள் தேவராஜன், சினேகா ஹரிகரன், அண்ணாமலை,செல்விராஜவேல், 14வது வார்டுதிமுக செயலாளர் கணபதி, முன்னாள் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கதிர்வேல்,ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியதாவது தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு நிலையத்திலேயே இருந்தால் ஏதாவது திடீர் சம்பவங்கள் ஏற்படும் போது உடனடியாக புறப்பட்டுச் செல்ல ஏதுவாக தீயணைப்பு நிலைய வளாகத்திலேயே குடியிருப்புகள் வேண்டும் என்கிற கோரிக்கை திருச்செங்கோட்டில் பல வருடங்களாக இருந்தது. மூன்று வருடங்களுக்கு முன் திட்டம் தீட்டப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இதற்கு அனுமதி வழங்கினார். பாறை நிறைந்த இடமாக காணப்பட்ட இந்த இடம்தற்போது சீரமைக்கப்பட்டு கட்டிடம் கட்ட ஏதுவாக உள்ளது. இங்கு ரூ.மூன்று கோடியே 22 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்ட பணிகள் இன்று பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது. கபிலர் மலையில் தீயணைப்பு நிலையம் வேண்டுமென மாவட்ட தீயணை அலுவலர் செந்தில்குமார் ஒரு கோரிக்கையை வைத்தார். இது பரமத்தி தொகுதி எம்எல்ஏவாக கே.எஸ்.மூர்த்தி இருக்கும்போதே கோரிக்கை வைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. இடையில் ஏதோ அரசியல் காரணங்களால் தீயணைப்பு நிலையம் வராமல் தடுத்து நிறுத்தப் பட்டிருந்தது. மீண்டும் இது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் தீயணைப்பு நிலையம் கபிலர் மலையில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். தீயணைப்பு வீரர்களின் பணி சாதாரணமானதல்ல. சமீபத்தில் திருச்செங்கோடு நகரில் ஒரு சாக்கு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தின் போது நள்ளிரவிலும் சிறப்பாக பணியாற்றி தீ மேலும் பரவாமல் தடுத்த தீயணைப்பு வீரர்களின் பணி பாராட்டுக்குரியது.அன்று தீயணைப்பு வீரர்களின் சரியான திட்டமிடல் இல்லாமல் இருந்திருந்தால் தீ வேகமாக பரவி தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கும். உங்கள் பணி சிறப்பாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உங்கள் அயராத உழைப்பிற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.
Next Story

