பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்
X
அரபு உடை அணிந்து வந்த நபர் கலெக்டர் ஆபீஸில் மனு
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்க முகாம் இன்று நடந்தது. இங்கு தாதகாபட்டியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் அரபு நாடுகளில் அணியும் உடையை அணிந்து கையில் வாள் போன்ற பொம்மை கத்தியுடன் மனு அளிக்க வந்தார். அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரிடம் இருந்து பொம்மை வாளை வாங்கிக்கொண்டனர். இதையடுத்து அவரை கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். இது குறித்து அவர் கூறுகையில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க கடுமையான சட்டம் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக அரபு நாடுகளில் வழங்கப்படுவது போன்ற மிக கடுமையான கொடூர தண்டனைகள் வழங்க வேண்டும். எனவே கவனத்தை ஈர்ப்பதற்காக அரபு நாட்டின் உடை அணிந்து வந்து மனு அளித்தேன் என்றார்.
Next Story