மின் கம்பம் முறிந்து விழுந்து பசு மாடு உயிரிழப்பு

மின் கம்பம் முறிந்து விழுந்து பசு மாடு உயிரிழப்பு
X
சிவகங்கை அருகே மின் கம்பம் முறிந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழந்தது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை பேரூராட்சி 11 -ஆவது வாா்டில் உள்ள அமுதா என்பவரது வீட்டின் முன் பசு மாடு கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் பழுதான நிலையில் இருந்த மின் கம்பம் முறிந்து பசு மாடு மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழந்தது. அப்போது, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால், உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது. பேரூராட்சி பகுதியில் பழுதான நிலையில் உள்ள 10 -க்கும் மேற்பட்ட மின் கம்பங்களை மாற்றக் கோரி, மின் வாரியத்தில் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, அப்பகுதியில் உள்ள பழுதான மின் கம்பங்களை போா்க்கால அடிப்படையில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Next Story