கோப்புகள் மற்றும் மனுக்கள் பிரித்தெடுக்கும் பணி தீவிரம்

X
ஒருங்கிணைந்த அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நெமிலி வட்டாட்சியர் அலுவலகம் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட கோப்புகள் மற்றும் மனுக்கள், கடிதங்கள் ஆகியவற்றை பிரித்தெடுக்கும் பணி அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் நெமிலி வட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டு மனுக்களை பிரித்தெடுத்தனர்.
Next Story

