ஊஞ்சல், கடைகள் என களை கட்டும் காளியம்மன் கோவில் வளாகம்
Komarapalayam King 24x7 |3 March 2025 7:55 PM ISTகுமாரபாளையம் காளியம்மன் கோவில் வளாகம் ஊஞ்சல், கடைகள் என களை கட்டி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் மகா குண்டம் தேர்த்திருவிழா துவங்கி நடந்து வருகிறது. மார்ச்.5ல் மகா குண்டம், அதையடுத்து அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வாண வேடிக்கை, வண்டி வேடிக்கை, ஊஞ்சல் விழா என நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. குண்டம் இறங்கும் பக்தர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கங்கணம் கட்டிக்கொண்டு, மஞ்சள் ஆடை அணிந்து விரதம் இருந்து, தினமும் பெரும்பாலோர் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து வருகிறார்கள். ஊர் பொதுமக்கள் பெரும்பாலோர் கோவில் வளாகம் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் தங்கள் குழந்தைகளுடன் ஆடியும், அங்குள்ள உணவு பொருட்கள் கடைகளில் வாங்கியும் வருகிறார்கள். இது தவிர ஆடைகள், ஆபரணங்கள் விற்கும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளதால், அங்கும் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் சென்று வாங்கி வருகின்றனர்.
Next Story


