பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது
X
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது
விருதுநகர் மாவட்டத்தில் +2 தேர்வை 98 மையங்களில் 222 பள்ளிகளை சேர்ந்த 22 ஆயிரத்து 224 மாணவர்கள் எழுதுகின்றனர் தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.இத்தேர்வை விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள 222 பள்ளிகளை சேர்ந்த 22 ஆயிரத்து 176 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக 98 தேர்வு மையங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 137 மாற்றுத்திறனாளி மாணவர்களும் இத்தேர்வை எழுதுவதால் அவர்களுக்காக தேர்வு எழுத தரைத்தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பார்வையற்றோருக்கு, சொல்வதை கேட்டு எழுதுபவர்கள் உதவி வருகின்றனர். தேர்வு மையங்களில் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்கள் நிர்வகிக்கப்பட்டு நேரடி கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறது.மேலும் 5 நிலை கண்காணிப்பு குழுவில் 166 ஆசிரியர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story