தனியார் பேருந்து மோதி பைக்கில் சென்றவர் பலி

X
தஞ்சாவூர் அருகே புதுப்பட்டினம் பிரிவு சாலையில், தனியார் பேருந்து பைக் மீது மோதியதில், மின்சாதன பொருட்கள் விற்பனை கடை உரிமையாளர் பலியானார். தஞ்சாவூர்,தெற்கு வீதி மாட்டுமேஸ்திரி சந்து பகுதியை சேர்ந்த, ஜோகாஜி மகன் நரசராம்பட்டேல் (45), இவர் அப்பகுதியில் மின்சாதன பொருட்கள் விற்பனை கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை பட்டுக்கோட்டைக்கு தனது பைக்கில், நரசராம்பட்டேல் சென்றார். பின்னர் மீண்டும் தஞ்சாவூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, புதுப்பட்டினம் பிரிவு சாலை பகுதியில், முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்த மீரா என்ற தனியார் பேருந்து, பைக் மீது மோதியது. இதில் நரசராம்பட்டேல் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த தாலுகா காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நரசராம்பட்டேல் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய தனியார் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
Next Story

