அரசு பேருந்து மீது கல்வீச்சு கண்ணாடி உடைப்பு

அரசு பேருந்து மீது கல்வீச்சு கண்ணாடி உடைப்பு
X
மதுபோதையில் அரசு பேருந்து மீது கல் வீசிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
பெரம்பலூர் அருகே ஹார்ன் அடித்தும் வழிவிடாத அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்களை பாடாலூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூரில் இருந்து இன்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று செட்டிகுளம் நோக்கி 30 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. செட்டிகுளம் மாதா கோவில் அருகே சென்றகோவில் அருகே சென்ற போது பைக்கில் வந்த வாலிபர்களுக்கு அரசு பேருந்து வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அரசு பஸ்சை நிறுத்துவதற்காக பைக்கில் வாலிபர்கள் சைகை காட்டினர். ஆனால், பஸ் அங்குள்ள மாதா கோவில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டனர். அப்போது பைக்கில் வந்த வாலிபர்கள் போதையில் ஆத்திரம் அடைந்து, பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் டிரைவரின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடி உடைந்தது. இதையடுத்து டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி விட்டு பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்தபாடாலூர் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கிராம பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story