மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு ஆரணியில் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் நலதிட்ட உதவிகள்.
மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு ஆரணியில் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் நலதிட்ட உதவிகள். ஆரணி பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு ஆரணி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அன்னதானம் மற்றும் நலதிட்ட உதவிகளை ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் திங்கள்கிழமை வழங்கினார். ஆரணி நகரம், அண்ணாசிலை அருகில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமையில் ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். மேலும் ஆரணி புதிய பஸ்நிலையத்தில் சுற்றுச்சூழல் அணி மாவட்டஅமைப்பாளர் ஏ.எச்.இப்ராகிம் தலைமையில் அன்னதானம் வழங்கினார். ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் சேவூர் முன்னாள் ஊராட்சித்தலைவர் ஷர்மிளாதரணி தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் அன்னதானம் வழங்கினார். உடன் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், தொகுதி செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, கண்ணமங்கலம் நகர செயலாளர் கோவர்த்தனன், ஒன்றிய செயலாளர்கள் மோகன், மாமது, சுந்தர், அயலக அணி மாவட்டதுணை அமைப்பாளர் கப்பல் இ.கங்காதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேற்குஆரணி ஒன்றியம், கொங்கராம்பட்டு கிராமத்தில் தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு ஆரணிஎம்.பி, எம்.எஸ்.தரணிவேந்தன் அன்னதானம் வழங்கினார். மேலும்அப்பகுதி இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட்வாலிபால் உள்ளிட்ட விளையாட்டு உபகரணபொருட்களையும்,அப்பகுதி தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளையும் வழங்கினார். ஏற்பாடுகளை திமுகசுற்றுச்சூழல்அணி மாவட்ட துணைஅமைப்பாளர் ஆ.மாதவன்செய்திருந்தார்உடன் கண்ணமங்கலம் நகர செயலாளர் கோவர்த்தனன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ்.உதயராஜ், கிளைநிர்வாகிகள் ராஜமாணிக்கம், சசி,அய்யப்பன், ராஜி, மணிகண்டன் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.
Next Story



