போக்குவரத்து விதி மீறல்

X
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், வடக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனைகள் மேற்கொண்டு அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த மாதத்தில் குடிபோதையில் வாகனம் இயக்கியதாக 95 வழக்குகள் பதிவு செய்தனர். இதேபோல் டிரைவிங் லைசென்ஸ் இன்றி வாகனம் இயக்கியதாக 12 வழக்குகளும், ஹெல்மெட் இன்றி இருசக்கர வாகனத்தை இயக்கியதாக 558 வழக்குகளும், இருசக்கர வாகனத்தில் பின்னால் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 13 வழக்குகளும், சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 13 வழக்குகளும், மொபைல் போன் பேசிவாறு வாகனம் இயக்கியதாக 36 வழக்குகளும், இதர பிரிவுகள் என மொத்தம் 1027 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அபராத தொகையாக ரூ. 2,70,000 வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் இயக்கியதாக 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் போலீசாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story

