திருவேங்கடம் மோட்டார் சைக்கிள் சென்றவர் தவறி விழுந்து பலி

X
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே ஆலடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் காளிராஜ்(40) இவர் கூலி வேலை செய்து வருகிறார், இந்த நிலையில் இவர் கடந்த வாரம் மது போதையில் மோட்டார் சைக்கிள் திருவேங்கடத்தில் இருந்து ஆலடிப்பட்டி கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரவிதமாக சைக்கிள் இருந்து தவறி விழுந்து படுகாயம் ஏற்பட்டார். இவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

