குமரியில் பாலியல் தொழில் தடுப்புச் சட்டத்தில் ரவுடிக்கு குண்டாஸ்

நாகர்கோவில்
கன்னியாகுமரியில் ஒரு மசாஜ் சென்டரில் 2 வாரங்களுக்கு முன்பு  போலீசார் சோதனை நடத்தியதில் பெண்களை வைத்து விபச்சார நடத்தியதாக சிலரை கைது செய்தனர். விசாரணையில் சுசீந்திரம் அருகே உள்ள விஜய் ஆனந்த் (50) என்பவர் புரோக்கர் போல் செயல்பட்டு விபச்சாரம்  நடத்தியது தெரிய வந்தது. போலீசார் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவரை  கைது செய்தனர்.       அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற போது தவறி விழுந்து அவரது கையில் முறிவு ஏற்பட்டது. இதை அடுத்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரடுமாறு எஸ்பி ஸ்டாலின் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.        இதை ஏற்று விஜய் ஆனந்தை குண்டர்  சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விஜய் ஆனந்த் மருத்துவ பரிசோதனைக்கு பின்  அவரை கைது செய்து பாளையங்கோட்டை  சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Next Story