சோளிங்கரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

சோளிங்கரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
X
ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் மற்றும் சோளிங்கர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 77-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஓச்சேரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ஏ.ஜி.விஜயன், ஏ.எல்.விஜயன், பெல். கார்த்திகேயன், அருணாபதி, காவேரிப்பாக்கம் பேரூர் செயலாளர் ஆர்.வி.என்.மஞ்சுநாதன், காவேரிப் பாக்கம் ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மாரிமுத்து, மாவட்ட மகளிர் அணி செயலாளர் மணிமேகலை உள்ளிட்டோர் முன் னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செய லாளர், சு.ரவி. எம்.ஏல்.ஏ., தலைமை கழக பேச்சாளர்கள் விஜய்கணேஷ், சந்திரகாசன், மாவட்ட அவைத்தலைவர் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் பேரூராட்சி பொருளாளர் ரங்கநாதன். ஓச்சேரி கிளை செயலாளர் ஜெயகாந்தன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வீரன், துணைத்தலைவர் எஸ்.அரி தாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கலை பாலு, இளைஞர் அணி நிர்வாகி எம்.எல்.வி.செந்தில் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இறுதியில் காவேரிப்பாக்கம் ஒன்றிய துணை செயலாளர் கரும் பாத்தை நன்றி கூறினார்.
Next Story