திருவள்ளூரில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு துவங்கிய முதல் நாளில் சோகம்

திருவள்ளூரில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு துவங்கிய முதல் நாளில் சோகம்
திருவள்ளூரில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு துவங்கிய முதல் நாளில் சோகம் திருவள்ளூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் ஜெயா நகரை சேர்ந்தவர் சுரேஷ் வயது 52 இவர் திருவள்ளூரில் போட்டோ ஸ்டுடியோ மற்றும் லேமினேஷன் தொழில் செய்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி திவ்யா என்கின்ற மனைவியும், பிரதீஸ் (வயது 20) என்கின்ற ஒரு மகனும், பிரியா ( வயது 17)என்ற மகளும் உள்ள நிலையில் பிரதீஸ் சென்னையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டும், அவரது தங்கை பிரியா திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ நிகேதன் தனியார் பள்ளியில் பிளஸ் டூ பயின்று வந்தார் . இந்த நிலையில் இன்று பிளஸ் டூ அரசு பொது தேர்வு துவங்கியது.இதற்காக மாணவி பிரியா தேர்வு எழுதுவதற்காக நன்றாக படித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவி இன்று அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் தனது வீட்டின் மொட்டை மாடியில் படிப்பதற்காக செல்வதாக கூறிவிட்டு சென்றார். அப்போது அவர் யாரும் எதிர்பாராத வகையில் நான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனால் பலத்த தீக்யாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டார். தன் மகளின் அலறல் சத்தம் கேட்டு பிரியாவின் தந்தை மற்றும் வீட்டில் இருந்தவர்கள் ஓடி சென்று பலத்த தீக்காயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 80 சதவீத தீக்காயம் உள்ளதால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக உடனடியாக அனுப்பி வைத்தனர். பிரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடத்தினர் . விசாரணையில் அந்த மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 92 சதவீதம் மதிப்பெண் பெற்றது குறிப்பிடத்தக்கது. அவர் எதற்காக தேர்வு நடைபெறும் நாள் அன்று யாரும் எதிர்பாராத வகையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தேர்வு பயத்தில் தீக்குளித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு தொடங்கிய முதல் நாளிலே திருவள்ளூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Next Story