மகா காளியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கலச அபிஷேகம்

பழமை வாய்ந்த சோழர்கால கிராம தேவதை கோவிலான ஏழு கிராம மக்கள் வழிபடும் காவல் தெய்வமான மகா காளியம்மன் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு கலச அபிஷேகம் வெகு சிறப்பாக பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
போரூரில் அமைந்த பழமை வாய்ந்த சோழர்கால கிராம தேவதை கோவிலான ஏழு கிராம மக்கள் வழிபடும் காவல் தெய்வமான மகா காளியம்மன் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு கலச அபிஷேகம் வெகு சிறப்பாக பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பூந்தமல்லி அருகே போரூரில் அமைந்த மகா காளி கோயிலில் பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள் காளியம்மன் கோயிலுக்கு வருகை தந்து பக்தர்களுடன் கலச பூஜை செய்து வழிபட்டனர்.வடக்கு திசை பார்த்து உக்கிர நிலையில் உள்ள ஸ்ரீ மகா காளி சிலையை 25ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீ ஊரக பெருமாள் கோயிலில்வைத்திருந்ததை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் போரூர் பகுதி மக்கள் அனுமதி பெற்று காளி அம்மன் சிலையை ஊரக பெருமாள் கோவிலில் இருந்து ஊர்வலமாக மேள தாளங்களுடன் கொண்டு வந்து வழிப்பட்டனர் கடந்த எட்டு ஆண்டுகளாக போரூர் சுற்றுவட்டார பகுதிகள் அமைந்த ராமாபுரம் கெருகம்பாக்கம் ஒருவர் உள்ளிட்ட ஏழு கிராம மக்கள் வழிபட்டு வந்த சோழர் கால கிராம தேவதை கோவிலான மகா காளியம்மன் ஆலயத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கருங்கற்களால் கட்டப்பட்ட ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலி ல் உற்சவ அம்மன் மற்றும் கலசம் விநாயகர் சிலைகள் உள்ளிட்டவைகளை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். கருங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் வருகிற 10-ஆம் தேதி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது
Next Story